நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக்க தெரிய வந்துள்ளது.
அதனடிப்படையில், 65,000 மெற்றிக் தொன் அரிசியானது இறக்குமதி செய்யப்படவுள்ளது.
மேலும் நாட்டின் அரிசி நெருக்கடி தொடர்பில், அரிசி இறக்குமதியாளர்களுக்கும், சதொச உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன், எதிர்வரும் பெரும்போக நெல் அறுவடை வரை அரிசிக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளலதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது