அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
தனது கட்சி அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இவ்வருடப் பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் எரிவாயு சிலின்டர் சின்னத்தில் போட்டியிட்டேன்.
வாக்காளர்கள் 20,401 வாக்குகளையே வழங்கினார்கள். கடந்த தேர்தலில் தான் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தேன்.
மக்களுக்கு தனது அரசியல் தேவையில்லை. தனது அரசியல் பயணத்தின் போது தொடர்ச்சியாக பல்வேறு நபர்களாலும் ஊடகங்களாலும் தம்மை அவதூறாகப் பேசினாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு தனது தொகுதியின் வாக்காளர்களுக்காகவே அரசியலில் இருந்தேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.