இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 10வது பாராளுமன்ற புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நியமனம் செய்யும் திகதி தொடர்பான தகவல் ஒன்றை வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் புதிய அமைச்சரவையானது எதிர்வரும் 18ஆம் திகதி நியமிக்கப்படவு ள்ளதாகவும் எதிர்வரும் 21ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய மக்கள் அதிகாரத்தில் நூற்று அறுபது எம்.பி பதவிகளை இவ்வருடம் பாராளுமன்றத்திற்கு வழங்கி மக்கள் தமது பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வளர்ந்த நாட்டை கட்டியெழுப்பும் பணியை அரசு உடனடியாக தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் இந்த அமைச்சரவை அதிகபட்சம் இருபத்தைந்து அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும். அதிகபட்சமாக இருபத்தைந்து பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
புதிய அரசில் இராஜாங்க அமைச்சர்களோ அல்லது அமைச்சரவை அல்லாத அமைச்சர்களோ நியமிக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து புதிய பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.