கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் பிரசாரத்திற்காக ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர் ஒருவரே இவ்வாறு
விளையாட்டு மைதானத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இத்தேகந்த பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான அருண குமார என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் நேற்று முன்தினம் கஹவத்தை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி தலைமையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.