இந்தியா எமது தொப்பிள் கொடி உறவாக இருக்கலாம்.ஆனால் அவர்களுக்கு எந்த விதத்திலுமே எமது மக்களுடைய வளங்களை சூறையாடுவதற்கான உரிமை கிடையாது என நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கடற்றொழிலாளர் சம்மேளன காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பானது எமக்கு சொந்தமானது. அது இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல. அவர்களுக்கு எந்த விதத்திலுமே எமது மக்களுடைய வளங்களை சூறையாடுவதற்கான உரிமை கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.