இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'.
இது தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டீசர் நேற்றையதினம் வெளியாகியுள்ளது.
படத்தின் டேஸ்டர் கட் என அழைக்கப்படும் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளை கொண்டு தெறி படத்தின் காட்சிகள் இடம் பெற்று டீசர் அமைந்துள்ளது.
தற்பொழுது படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.