மட்டக்களப்பில் விநாயகமூர்த்தி முரளிதரனின்(Vinayagamoorthy Muralitharan) (கருணா) கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது சிவனேசத்துரை சந்திரகாந்தன் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்ராதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் எரிய வருகையில், “மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பாடசாலை வீதியில் ஜனநாயக முன்னணி கட்சியான கருணா அம்மானின் கட்சியின் வேட்பாளரின் காரியாலயத்தின் முன்னாள் உள்ள வீதியில் ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் 6 பேர் அங்குள்ள சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த கருணா அம்மான் கட்சி வேட்பாளர்களின் சுவரொட்டிகள் மீது சுவரொட்டிகளை ஒட்டினர்.
இதன்போது கருணா தரப்பின் வேட்பாளர் சென்று எங்கள் சுவரொட்டிகளுக்கு மேல் சுவரொட்டிகளை ஒட்டவேண்டாம் என தெரிவித்த நிலையில் இரு கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே வாய்தர்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அது கைகலப்பாகமாறியுள்ளது.
இதனையடுத்து கருணா தரப்பின் ஆதரவாளர் படுகாயமடைந்ததையடுத்து பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளன ர்.
அத்துடன் படுகாய மடைந்தவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.