கொழும்பில் நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனம்!

tubetamil
0

 கொழும்பின் புறநகர் பகுதியில் தும்மோதர கால்வாயை கடக்க முயன்ற கெப் ரக வாகனம் ஒன்று  திடீரென ஏற்பட்ட நீரோட்டத்தினால் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் நேற்று பிற்பகல் ஏற்பட்டுள்ளது.



இந்த வாகனமானது தும்மோதர கால்வாயை கடக்க சென்றபோதே 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவத்தின் போது வண்டியில் சாரதி உட்பட 04 பேர் பயணித்துள்ளனர். கேப் சாரதியும் அதன் உரிமையாளரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மேலும் உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 69 வயதுடைய பலல்கொடுவ மற்றும் கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top