இரண்டாவது முறை கர்ப்பமான எமி ஜாக்சன்...!

tubetamil
0

 தமிழில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். பின் தாண்டவம், தெறி, ஐ, 2.0 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.



அத்துடன் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த மிஷன் சாப்டர் 1 படத்தில் ஆக்ஷன் நாயகியாக மிரட்டியிருந்தார்.


இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆண்டு ஜார்ஜ் என்பவரை காதலித்து அவருடைய லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த எமி ஜாக்சனுக்கு முதலில் ஆன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.




குழந்தை பிறந்த பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக Ed Westwick என்கிற ஹாலிவுட் நடிகரை காதலித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் எமி ஜாக்சின் - Ed Westwick திருமணம் நடைபெற்றது.



இந்த நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக நடிகை எமி ஜாக்சன் அறிவித்துள்ளார். தனது கணவர் Ed Westwick உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்துள்ள நடிகை எமி ஜான்சனுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top