இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்

tubetamil
0

 175,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, எதிர்வரும் 6ஆம் திகதி இந்த திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.  



அதனடிப்படையில்,  91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 85,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் வழங்கப்படவுள்ளது.


364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top