புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அறிவிப்பு.

tubetamil
0

 வடக்கு மாகாணத்தின் சகல பகுதிகளிலும் 350 மிலி வரையான கடும் மழையுடன் கூடிய காற்று வீசுவதற்கான ஏதுநிலைகள் காணப்படுகின்ற நிலையில் சூழல் வெப்ப நிலையும் 20 டிகிரி செல்சியஸ் வரை குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக வடமாகாண கால் நடை கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களதின் மாகாணப்பணிப்பாளர். தெரிவித்துள்ளார்.


நேற்று(25) விடுத்துள்ள அறிவித்தலில், இந்த நிலைமை இன்று முதல் இரண்டு மூன்று தினங்கள் (26-28) இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் இத்தகைய காலநிலை மாற்றங்களினால் திறந்த வெளிகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் கோழிகள் பாரிய அளவில் பாதிப்படையக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமிருப்பதாகவும் எனவே கால்நடைப்பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பாதகாப்பதற்காக பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசரமும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குளிர் காற்று, கடும் மழை வெள்ளம் போன்றவற்றில் இருந்து தமது கால்நடைகளை பாதகாப்பதற்காக கொட்டகைகள் மற்றும் மேட்டு நிலங்களில் கால்நடைகளை பாதுகாப்பாக அடைத்து வைக்க வேண்டும் எனவும் வெப்பமூட்டப்பட்ட சூழலில் உடல் வெப்பத்தை பாதுகாக்கும் வண்ணம் பராமரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதுடன் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு உடன் சிகிச்சை பெறும் பொருட்டு அருகிலுள்ள கால்நடை மருத்துவரை உதவிக்கு அழைக்க வேண்டும் எனவும் போதிய கால்நடை தீவனங்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் கால்நடைகள் இறப்பு ஏற்படின் பண்ணைப்பதிவு இலக்கம் மற்றும் காது இலக்கம் என்பவற்றுடன் இறப்பை உறுதிசெய்யும் வகையிலான புகைப்படங்களுடன் கால்நடை மருத்துவ பணிமனைக்கு தகவலை வழங்குதல் ஆகியவை அவசியம் எனவும் எது தொடர்பான தகவல்களை வழங்க யாழ் மாவட்டம்- 0773638953, கிளிநொச்சி- 0777799066, முல்லைத்தீவு - 0770755225, வவுனியா - 0774457417, மன்னார்- 0777853124 ஆகிய தொலைபேசி விளக்கங்களுக்கு அழைக்கவும் எனவும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top