வீட்டு மதிலை மோதிச்சென்ற பட்டா ரக வாகனம்

tubetamil
0

சுதுமலையில் பட்டா ரக வாகனம் ஒன்றும் கஜஸ் ரக வாகனம் ஒன்றும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளை வீட்டு மதில் ஒன்றைபட்டா ரக  வாகனம் மோதியுள்ளதாக  மானிப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர் 


இந்த சம்பவமானது தாவடி - சுதுமலை வீதியில் அமைந்துள்ள சுதுமலை அம்மன் கோவிலடியிலேயே இடம்பெற்றுள்ளது.



இதன்போது சுதுமலை அம்மன் கோவில் குருக்களது வீட்டு மதிலே பாதிக்கப்பட்டுள்ளதுடன் slt தொலைத்தொடர்பு  கோபுரம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.



இதே வேளை இந்த விபத்து சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன் குறித்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மானிப்பாய் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.














கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top