இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரிப்பால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் இன்று திறக்கப்படலாம் - வெள்ள முன்னெச்சரிக்கை!

tubetamil
0

இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரிப்பால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் இன்று திறக்கப்படலாம் என வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இன்று பகல்வரை 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடுக்குளம் 27 அடியை அண்மித்துள்ளது.


அத்துடன் இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.



கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்பாசன குளங்கள் நிறைந்து வருகின்றது. பிரமந்தனாறு குளம், கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்கும் ஆகியன லான் பாய்ந்து வருகின்றது.



இந்த நிலையில் தாழ்நில பகுதியில் உள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தி வருகின்றது.



இந்த நிலையில் கால்நடைகளை பாதுகாக்கும் நோக்குடன் பண்ணையாளர்கள் தமது கால் நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று வருகித்தனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top