கனடாவில் பரவி வரும் தட்டம்மை நோய்

tubetamil
0

 கனடாவின் நியூ பிரவுன்ஸ்வீக் பிராந்தியத்தில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக்க தெரிய வந்துள்ளது.


இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, கடந்த மூன்று தினங்களில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


பிரிட்ரிக்ஷன், அப்பர் செயின் ஜோன் ரிவர் வெலி ஆகிய பகுதிகளில் இவ்வாறு தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


அத்துடன் நியூ பிரவுன்ஸ்விக் பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவல்களை உறுதி செய்துள்ளது.



நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் நோயாளர் எண்ணிக்கை வரையறுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.



தட்டம்மை நோய் மிக வேகமாக ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு மற்றொருவருக்கு பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.


அத்துடன் தடுப்பூசிகளை உரிய முறையில் ஏற்றிக் கொள்வதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top