2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இரண்டு நாட்களாக நடந்து முடிந்தது. மொத்தம் 577 வீரர்கள் இந்த ஏலத்திற்காகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் அணிகளுக்குத் தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
ரூ.120 கோடி வரை மதிப்புள்ள வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரூ.37 கோடியில் விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களைத் தக்கவைத்து ரூ.83 கோடியோடு ஏலத்தில் பங்கேற்றுள்ளது.
இந்நிலையில், ரூ.120 கோடி வரை மதிப்புள்ள வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரூ.37 கோடியில் விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களைத் தக்கவைத்து ரூ.83 கோடியோடு ஏலத்தில் பங்கேற்றது.
பெங்களூரு அணி அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட்டை ரூ.12.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.