ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ(Moscow) மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உக்ரைன் பாரிய வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதால் அங்குள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வ்ருவதாவது, உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த பாரிய தாக்குதல் நேற்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலானது ரஷ்ய தலைநகர் மொஸ்கோமற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள ராமென்ஸ்காய், கொலோமென்ஸ்கி மாவட்டங்களிலும், மொஸ்கோவின் தென்மேற்கே உள்ள டொமோடெடோவோ நகரத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த தாக்குதலில் 34 டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் பாதுகாப்பு காரணமாக டொமோடெடோவோ உள்ளிட்ட 3 விமான நிலையங்கள் மூடப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.