நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடுவதற்க்கு மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் காரணமாகவும், 15 ஆம் திகதி பௌர்னமி தினத்தை முன்னிட்டும் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தினங்களில் அனுமதிச்சட்டத்தை மீறும் மதுபானசாலைகள் மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்துமாறும் பணித்துள்ளார்.