அநுர அரசில் இரண்டு தமிழ் அமைச்சர்கள்...!

tubetamil
0

 இலங்கையின் வரலாற்றில் மிகவும் எளிமையான முறையில் இன்றையதினம் அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற பதவிப்பிரமாண நிகழ்வின் போது 21 அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதில் இரண்டு தமிழ் அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில் ராமலிங்கம் சந்திரசேகர் தமிழ் மொழியில் சத்தியப்பிரமாணம் செய்ததுடன், அது தொடர்பான தமிழ் ஆவணத்திலும் கைச்சாத்திட்டார்.

மாத்தறையை சேர்ந்த தமிழ் பெண்ணான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அமைச்சராக இன்று இன்று பதவியேற்றார்.

வழமையை விட குறைந்தளவான அமைச்சுக்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பொருத்தமான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். 


 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top