தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து பிரபலமானவர் தான் நடிகை சமந்தா.
இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த சிட்டாடல் புரொமோஷன் நிகழிச்சியில் தன் முன்னாள் கணவர் நாக சைதன்யா குறித்து பேசியுள்ளார். அவரிடம் நீங்கள் மிகவும் அதிகமாக செலவு செய்த வீணான விஷயம் எது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, சற்றும் யோசிக்காமல் தன் முன்னாள் கணவருக்கு கொடுத்த பரிசுகள் தான் நான் வீணாக செலவு செய்த பொருள் என்று பதிலளித்துள்ளார்.
மேலும், எவ்வளவு செலவு செய்தீர்கள் என்று கேட்கப்பட்டதுக்கு, கொஞ்சம் அதிகமாகவே என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசிய இந்த வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாகியுள்ளது.