முதல் நாடாளுமன்ற அமர்வில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியானதைத் தொடர்ந்து, எம்பி அர்ச்சுனாவுடன் கலந்துரையாடுவதாக சபாநாயகர் அஷோக ரங்வல தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்த சபாநாயகர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "தனி ஒரு நபராக அவரது அபிலாஷை என்னவென்று எங்களுக்குத் தெரியாது. அவரை பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் அபிலாஷை மிகத் தெளிவாக உள்ளது.
மக்கள் இன்று நாட்டில் அப்படியொரு விடயத்தை எதிர்பார்க்கவில்லை. அந்த மக்கள் வடக்கு, மேற்கு அல்லது கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் ஒற்றுமையுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என நாங்கள் நம்புகின்றோம்.
அது ஒரு தனியொருவரால் மேற்கொள்ளப்பட்டது என்பது எமக்கு தெரியும். அதுபற்றி அவரிடம் பேசி, அவரது அனைத்து பேஸ்புக் கணக்குகளையும் சரிபார்த்தோம். நாமும் அவருடன் பேசலாம், புத்திசாலித்தனமாக செயல்பட்டு எதிர்காலத்தில் இதை தெளிவுபடுத்துவோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் செயற்படும் எனவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.