டெல்லி கணேஷ் இறப்பிற்கு என்ன காரணம் ? பலரும் அறிந்திடாத தகவல்..!

tubetamil
0

 தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்த நடிகர் டெல்லி கணேஷ், சினிமாவுக்கு வர முன்னர் 1964 முதல் 1974 வரையிலான காலப்பகுதியில் இந்திய வான்படையில் பணியாற்றியுள்ளார்.



பின்னர், கடந்த 1976 ஆம் ஆண்டு பட்டின பிரவேசம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். “தக்‌ஷின பாரத நாடக சபா” எனப்படும் டெல்லி நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார்.


அத்துடன் நகைச்சுவை கதாபாத்திரம், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்று நடிக்கக் கூடியவர்.



தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.



இந்த நிலையில் டெல்லி கனேஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.


இவ்வளவு பிரபலமாக இருந்த நடிகர் டெல்லி கணேஷின் இறப்பு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உடல்நிலை சரியில்லாத நிலையில் நேற்று (11) இரவு 1 மணி அளவில் அவரின் உயிர் இந்த உலகை விட்டு பிரிந்தது.


அத்துடன் , சென்னை ராமாவரத்தில் உள்ள டெல்லி கணேஷின் இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


டெல்லி கணேஷ் மறைவுக்கு அவரது ரசிகர்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.   


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top