2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதைத் தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போது, பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மகிந்த சமயவர்தன ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்தார்.
மேலும், கசிந்ததாகக் கூறப்படும் 03 வினாக்களுக்கு அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.