பரீட்சை மேற்பார்வை அதிகாரிகளுக்கு அலைபேசி பயன்படுத்த தடை!

tubetamil
0

 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை (G.C.E. A/L) மேற்பார்வை பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட மேற்பார்வை அதிகாரிகளுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல இலங்கை பரீட்சை திணைக்களம் தடை விதித்துள்ளது.



இதன்படி பரீட்சை மேற்பார்வை கடமையில் ஈடுபட்டுள்ள பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி தவிர்ந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகள் பரீட்சை நிலையத்திற்குள் அலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பரீட்சை நிலைய மேலதிக பொறுப்பதிகாரி ஆகியவர்களுக்கு மட்டுமே அலைபேசி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



மேலும் பரீட்சை நடைபெறும் காலத்தில் மேற்பார்வை நடவடிக்கைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி பரீட்சை மேற்பார்வை பணிகளுக்கு பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிமனைகளின் அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர்.


ஓர் மேற்பார்வை அதிகாரி 15 நாட்களில் 20 பரீட்சை நிலையங்களை மேற்பார்வை செய்ய வேண்டும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top