பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜினி சினிமாட்டிக் யுனிவர்ஸில் வரும் ‘பென்ஸ்’ படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கைதி, விக்ரம், லியோ படங்கள் மூலமாக லோகேஷ் உருவாகியுள்ள LCU - Loki Cinematic Universe அடுத்தடுத்து கைதி 2, ரோலக்ஸ், விக்ரம் 3 என பல படங்களுக்கு நீண்டுள்ளது.
இந்தப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.
வர் ‘ஆசக்கூட’, ‘கட்சி சேர’ உள்ளிட்ட பல பிரபல ஆல்பம் பாடல்களை வெளியிட்டுள்ளார். பிரபல பாடகர் திப்புவின் மகன் தான் இந்த சாய் அப்யங்கர். தற்போது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணைந்துள்ளது குறித்து மகிழ்ச்சியுடன் பேசியுள்ள அவர் “எல்சியுவில் ஏற்கனவே இரண்டு இசையமைப்பாளர்கள் (சாம் சிஎஸ், அனிருத்) உள்ளனர். மூன்றாவது நபராக நானும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பென்ஸ் படத்தின் ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாக இருக்கும். படத்தில் 7 முதல் 8 பாடல்கள் வரை இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.