ஜீ தமிழில் தற்போது நடைபெற்று வரும் சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் சிறுவன் ஒருவர் தன் தாத்தாவுடன் 70 மற்றும் 80 களில் வந்த பாடல்களை உணர்ச்சி தரும் வகைளில் பாடி அசத்தியுள்ளார்.
திவினேஷ் எனும் போட்டியாளரே நேற்றைய தினம் "“மயக்கமா தயக்கமா" என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்.
தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் இன் மெஹா ஓடிசன் நடைபெற்று வருகின்றது. இதில் பல குழந்தைகள் தங்கள் வசீகர குரலால் நடுவர்களை கவர்ந்து வருகின்றனர். தற்போது மெஹா ஓடிசன் முடிந்து முதல் சுற்றில் போட்டியாளர்கள் பாடி வருகின்றனர்.
அனைத்து குழந்தைகளும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நன்றாக பாடலை பாடி அனைவரையும் கவர்ந்து வரும் நிலையில் இந்த சிறுவனின் பாடல் ஒரு உணர்வு மனதில் ஏற்பட்டுள்ளது.
இவர் தன் தாத்தாவுடன் இருந்து அவர் பாடும் பழைய பாடல்களை பாடி அதையே பழகியுள்ளார். இன்று சரிகமப மேடை கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரையும் உணர்ச்சியடைய செய்துள்ளார்.
இதனால் நடுவர்கள் அனைவரும் மேடையில் எழுந்து வந்து பிளாடினம் பெர்போமன்ஸ் கொடுத்தனர். இந்த நேரத்தில் எஸ் பி சரண் இந்த சிறுவனுக்கு ஒரு சிறப்பான சத்தியத்தை கொடுத்துள்ளார்.
அதாவது இந்த சிறுவனுக்கு நடிகர் விஜய் என்றால் மிகவும் பிடிக்குமாம் அவரை போல நல்ல நடிகனாகவும் நல்ல பாடகனாகவும் ஆக வேண்டும் என்பது தான் இந்த சிறுவனுடைய ஆசையாம். இதன் காரணமாக எஸ் பி சரண் நடிகர் விஜயிடம் அழைத்து செல்வதாக சத்தியம் செய்துள்ளார்.
இவர் நேற்று “மயக்கமா தயக்கமா பாடல் பாடியது“ மேடையில் இருந்த அனைவரையும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சரிகமப ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியது.