இந்த வருடம் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.
இந்த சீசனில் பங்குபெற இளம் போட்டியாளர்கள் பலரும் ஆர்வமுடன் முன் வந்த நிலையில் பிக் பாஸில் மட்டுமில்ல இந்த சீசனில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் `ஆட்டம் புதுசு!' என்கிறார்கள். இந்த சீசனில் களமிறங்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு நெகிழ்வான பின்னணி இருக்கிறது. அனைத்துப் போட்டியாளர்களும் பொருளாதாரம் உட்பட பல சவால்களை தாண்டி இந்த `சூப்பர் சிங்கர்' மேடைக்கு வந்திருக்கிறார்கள். சில இளம் போட்டியாளர்களுக்கு அவர்களின் ஆசிரியர்களும், நண்பர்களும், உறவினர்களும் உதவிகள் செய்து இந்த மேடைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இந்த சீசனில் முதலாவதாக ராணிப்பேட்டையைச் சேர்ந்த நஸிரீன் என்ற போட்டியாளர் பங்கேற்கும் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது