யாழ்ப்பாணம் பொம்மவெளி பகுதியில் 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதியகட்சகருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின் பேரில் யாழ் மாவட்ட போலீசார் நடத்திய சோதனையின் போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரை மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாண போலீஸ் பிரிவில் பாரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
\
\