கன்னட சினிமா தற்போது இந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், சுதீப் நடிப்பில் வெளிவந்துள்ள 'மேக்ஸ்' படம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. 'கே.ஜி.எப்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, கன்னட சினிமாவின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆனால், 'மேக்ஸ்' படம் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? அல்லது கன்னட சினிமாவின் வன்முறைப் போக்கை மேலும் வலுப்படுத்தியதா? என்பது தொடர்பில் விமர்சனங்கள் வந்த வண்ணமே உள்ளன .
ஒரு புதிய காவல் நிலையத்திற்கு மாற்றப்படும் சுதீப், அங்கு நடைபெறும் கொடூரமான சம்பவங்களைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். கதைக்களம் மிகவும் எளிமையானது என்றாலும், அதில் வன்முறை காட்சிகள் அதிகமாகவே இடம்பெற்றுள்ளன. சுதீப் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தாலும், கதாபாத்திரத்தின் ஆழம் குறைவாகவே உள்ளது. பிற கதாபாத்திரங்கள் அனைவரும் சுதீபின் நிழலில் மறைந்து போகின்றனர்.
படத்தை பற்றிய அலசல்,
'மேக்ஸ்' படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாகவே இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு காட்சியிலும் யாராவது ஒருவர் தாக்கப்படுவது அல்லது கொல்லப்படுவது போன்ற காட்சிகள் தொடர்ந்து வருகின்றன. இது பார்வையாளர்களை மனரீதியாக பாதிக்கக்கூடும். மேலும், படத்தில் உள்ள சில காட்சிகள் மிகவும் கற்பனைக்கு எட்டாததாகவும், யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதாகவும் உணர்கிறது.
அதில் ஒரு வகையாக வந்துள்ள படம் தான் மேக்ஸ். அதிலும் லோகேஷின் கைதி படத்தின் ஹெவி இன்ஸ்பிரிஷனில் வெளிவந்துள்ளது. சுதீப் ஒன் மேன் ஆர்மியாக தன் ஸ்டேஷனில் இரண்டு கைதிகள் இறந்துள்ளார்கள், அவர்களை தேடி ஒரு மிகப்பெரும் அரசியல் அடியாட்கள் மற்றும் கேங்ஸ்டர்கள் குவிய சிங்கிள் ஹாண்டில் எப்படி டீல் செய்கிறார் என்று பார்த்தால், சூப்பர் ஹீரோவை எல்லாம் மிஞ்சும் சாகசம் தான்.
அதிலும் எவ்வளவு பெரிய விஷயம் என்றாலும் அதை கூலாக அவர் ஹாண்டில் செய்யும் விதம் ரசிக்க வைக்கின்றது. படம் சவுத் இந்தியா முழுவதும் ரீச் ஆக வேண்டும் என்பதற்காக நம்ம ஊர் நடிகர்களான இளவரசுவிற்கு மிகவும் வலுவான கதாபாத்திரம் கொடுத்துள்ளனர், அவரும் அதை சிறப்பாக செய்துள்ளார், கொஞ்சம் கைதி பட மரியம் ஜார்ஜையும் நியாபகப்படுத்துகிறார்.
படம் முழுவதுமே ஆக்ஷன் ஆக்ஷன் தான், எப்படி அந்த இரண்டு மரணத்தையும் சுதீப் மறைக்கின்றார், தன்னையே நம்பி இருக்கும் காவலாளிகளை எப்படி காப்பாத்துகின்றார் என்ற பதட்டம், அவர்களை போலவே ஆடியன்ஸுக்கும் படம் முழுவதும் தொற்றிக்கொள்கின்றது, படம் ஜெட் வேகத்தில் பரபரவென செல்வது கூடுதல் பலம்.
அதிலும் எதிராளிகளை திசை திருப்பி 10 நிமிடம் டைம் கேட்டு சுதீப் செய்யும் சாகசங்கள் லாஜிக் மீறல்கள் என்றாலும் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளது. லாஜிக் என்றதும் தான் நியாபகம் வருகிறது, அதெல்லாம் படத்தில் இருக்கிறதா முதலில் என தோன்றுகின்றது, ஏனெனில் துளி அளவு கூட லாஜிக் என்பது இல்லை, குறிப்பாக 10 இடத்தில் பிரச்சனை இருந்தாலும், சுதீப் 10-யையும் முடித்து வைக்கின்றார், அது பிரச்சனையில்லை, அந்த 10 இடத்திலும் சுதீப் அவரே அடுத்தடுத்து வருவது இவர் எப்படி ப்ளாஷ் போல் ஓடி வருகிறாரா என்று தான் கேட்க தோன்றுகின்றது.
ஒளிப்பதிவு மற்றும் இசை:
படத்தின் ஒளிப்பதிவு நன்றாகவே உள்ளது. குறிப்பாக இரவு காட்சிகள் மிகவும் அழகாக படமாக்கப்பட்டுள்ளன. இசை பாடல்கள் சராசரி தரம் கொண்டவை. பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.
க்ளாப்ஸ்
படத்தின் ஆக்ஷன் காட்சிகள்
விறுவிறுவென செல்லும் திரைக்கதை
சுதீப் நடிப்பு
பல்ப்ஸ்
ஆக்ஷன் படம் தான் அதற்காக இவ்வளவு லாஜிக் மீறல்கள் எல்லாம் கொஞ்சம் கம்மி செய்திருக்கலாம்.
மேக்ஸ்' படம் வணிக ரீதியாக வெற்றி பெறலாம். ஆனால், திரைப்படம் என்ற வகையில் இது ஒரு சராசரி படம்தான். கன்னட சினிமா இதைவிட சிறந்த படங்களை கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும்.