2025 ல் நாட்டின் பிரதான ஏற்றுமதியாக கறுவா!

tubetamil
0

நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பயிர்களில் ஒன்றான கறுவாச் செய்கையின் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இலங்கையின் கறுவா உற்பத்தி வருடத்திற்கு 25,000 மெற்றிக தொன் வரை என்பதுடன் அதில் 19,000 மெற்றிக் தொன் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இலங்கையிலிருந்து இலத்தீன் அமெரிக்க வலய நாடுகளுக்கு அதிகமாகக் கறுவா ஏற்றுமதி செய்யப்படுவதுடன் அவை 60% ஆனவை ஆகும். இவற்றில் மெக்சிகோ முன்னணி வகிக்கிறது.

2025ம் ஆண்டின் புதிய திட்டம் ; நாட்டின் பிரதான ஏற்றுமதியாக கறுவாச் செய்கை | New Plan 2025 Cinnamon Cultivation Export

கறுவா அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர குறிப்பிடுகையில், தற்போது கறுவா ஏற்றுமதியினால் இலங்கைக்கு வருடத்திற்கு 250 மில்லியன் டொலர் வெளிநாட்டு செலாவணி கிடைக்கிறது.

அது தவிர இலங்கையின் பிரதான பெருந்தோட்டப் பயிராக கறுவா உற்பத்தியை முன்னேற்றுவதற்கு 2025 ஆம் ஆண்டிலிருந்து புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி இதுவரை கிடைக்கப்பெற்ற வருமானத்தை இரு மடங்குகளாக அதிகரிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top