யாழில் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சட்ட விரோத பனை அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஞாயிற்று கிழமை தனக்கிளப்பில், இந்த ஞாயிற்று கிழமை இருபாலை, நீர்வேலி கோப்பாய் பகுதியில் இதுவும் எனக்கு நேரடியாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த பட உள்ளது. ஞாயிற்று கிழமைகளில் தான் இந்த சட்ட விரோத செயற்பாடுகள் நடை பெறுகின்றன. மக்கள் விழிப்பாக இருந்து கொண்டு இதே போல பனை மரத்தை பாதுகாப்பு செய்வதற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.