தனங்கிளப்பில் 25 இற்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிப்பு!

tubetamil
0

 தனங்கிளப்பில்  பனைகள் சட்டவிரோதமாக வெட்டப்படுவது தொடர்பில் பொதுமக்களால் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக எமது அலுவலகர்களை உடனடியாக கள விஜயம் செய்ய வைத்ததன் அடிப்படையில் 25 இற்கும் மேற்பட்ட பயன் தரும் பனை மரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் அந்த வேலை செய்தவருக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்தாக பனை அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


 


இது குறித்து அவர் நேற்று (22) விடுத்த அறிவித்தலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 



 உடனடியாக காணி உரிமையாளர் நெல்லியடியிலிருந்து அழைக்கப்பட்டு சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வழக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 



. பனை வெட்ட பயன்படுத்தப்பட்ட கனரக இயந்திரத்துக்கு  எதிராகவும்  வளக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


பனை மரம் தறிப்பு தொடர்பாக கடந்த 4 ஆம் திகதி முதல் தடை  உத்தரவு எம்மால் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இவ்வாறான சட்ட விரோத செயல் தொடர்பாக மக்கள் உடனடியாக என்னுடைய தொலைபேசி இலக்கம் தலைவர் பனை அபுவிருத்திச்சங்கம் என்ற தொலைபேசி இலக்கத்துக்கு என்னேரமும்தொடர்பு கொண்டு தகவல்களை வளங்க முடியும்  என்று அறியத்தருகிறேன். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 



சட்டங்கள் கடுமையாக்க சிபார்சுகள் செய்யப்பட்டுள்ளன.. அடுத்து நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான தீர்மானம் எடுக்கப்படும்  என நம்பமுடிகிறது. 

 வரலாற்றில் முதல் முறையாக, கொழும்பு பங்கு சந்தையில் பங்குகளின்  மொத்த விலைச் சுட்டெண் அதிகரிப்பு!



0779273042 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக முறைப்பாட்டாளர்கள் பனை அளிப்பு தொடர்பான ஏனைய பனை அபிவிருத்தி சபை  சார்ந்த விடயங்களை அளிக்க முடியும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top