'த வொய்ஸ் ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் இலண்டன் வாழ் ஈழத்துச் சிறுமிகளான வைஷ்ணபி மற்றும் மதுமிதா ஆகியோர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடியுள்ள 'மகளி' என்ற அல்பம் பாடல் வெளியாகவுள்ளது.
இந்த பாடலானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலண்டன் நேரப்படி மாலை 5 மணிக்கு LONDON HAYES பகுதியில் அமைந்துள்ள CRYSTAL HALL இல் நடைபெறவுள்ள பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தப் பாடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலண்டன் நேரப்படி மாலை 5 மணிக்கு LONDON HAYES பகுதியில் அமைந்துள்ள CRYSTAL HALL இல் நடைபெறவுள்ள பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளது.
இந்தப் பாடலை ஜீ.வி.பிரகாஷின் தாயாரும், ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரியுமான ஏ.ஆர்.ரைஹானா அறிமுகம் செய்து வைக்க, பிரிட்டன் எம்.பியான எமிலி டார்லிங்டன் வெளியிட்டு வைக்கவுள்லாமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இந்தப் பாடலை கடந்த 16ஆம் திகதி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் த வொய்ஸ் ஆர்ட்ஸ் குழுவினருடன் எமிலி டார்லிங்டன் எம்.பி. இணைந்து பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.