யாழில் 30 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன்இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இரண்டு சந்தேக நபர்கள் இருவரும் 51வது படைப்பிரிவு இராணுவ முகாமைச் சேர்ந்த புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக, காரைநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் சாவகச்சேரி - மீசாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (11) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின்போது 213 கிலோ 889 கிராம் எடையுடைய கஞ்சா மற்றும் ஒரு படகு என்பன மீட்கப்பட்டன.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் சான்றுப் பொருட்களுடன் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.