பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ், நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகள் நிகழும் பகுதியாகும். அந்த வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் லூசன் நகரில் இன்று (30) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இன்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கமானது 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் மையம் (GFZ) வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்பது சிறிய அளவிலான சேதங்களை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.