தமிழில் பிக் பாஸ் சீசன் 8 துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தெலுங்கு 8வது சீசன் துவங்கிவிட்டது. நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் பைனல் நேற்று பிரமாண்டமாக நடந்தது.
இந்த நிலையில், மக்களிடம் இருந்து அதிக வாக்குகளைப் பெற்ற நிகில் எனும் போட்டியாளர் தெலுங்கு பிக் பாஸ் 8 கோப்பையை வென்றுள்ளார். அவருக்கு ரூ. 55 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை நிகிலுக்கு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது