பெண் மரணம் - மறைக்க முயற்சி செய்த கணவர் கைது!

tubetamil
0

 விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்குண்டு  உயிரிழந்த மனைவியின் மரணத்தை மறைக்க முயற்சித்த கணவன் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது. 

இரத்தினபுரி, கஹவத்தையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உடலை, குளித்ததனை போன்று செய்து துண்டு ஒன்றை உடலில் கட்டி மரணத்தை மறைக்க முற்பட்ட சந்தேகத்தின் பேரில் இறந்தவரின் கணவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

பொலிஸாரின் விசாரணையில், மின்சாரம் தாக்கியதற்கான காரணத்தை மறைக்க, இறந்த பெண்ணின் உடலில் ஈரமான ஆடைகளை அணிவித்து, சடலத்தை வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.


17ஆம் திகதி பிற்பகல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பிள்ளைகளின் தாயான செனரத் சந்திரலதாவின் பிரேத பரிசோதனையின் போது உண்மை தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பில் சாட்சியமளித்த உயிரிழந்த பெண்ணின் கணவர், குளித்துவிட்டு வீட்டுக்குள் வந்த தனது மனைவி பலத்த அலறல் சத்தம் கேட்டதாகவும், அங்கு சென்று சோதனையிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.


அப்போது மனைவி கீழே கிடந்ததாக குறிப்பிட்டுள்ளார். தந்தைக்கு ஆதரவாக 20 வயது மகனும் பொய் சாட்சியம் வழங்கியுள்ளார்.

விசாரணையின் போது விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கியமையே மரணத்திற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top