கரைச்சி விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

tubetamil
0

 வட மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில், கரைச்சி பிரதேச மட்ட விளையாட்டு போட்டியில் முதலாம் இரண்டாம் இடங்களை பெற்ற விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் இன்று(19) வழங்கி வைக்கப்பட்டன.


வட மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி(PSDG)  ஒதுக்கீட்டின் கீழ் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் தெரிவு செய்யப்பட்ட 9 கழகங்களுக்கு முதற்கட்டமாக குறித்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் றிச்சாட் மோகனதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) இ.நளாஜினி மற்றும் வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பா.முகுந்தன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள்,  வடமாகாண விளையாட்டுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டு கழகங்க அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top