கன்னட சினிமா மற்றும் சீரியல்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை சோபிதா சிவான்னா நேற்றைய தினம் ஐதராபாத்தில் திடீரென மரணமடைந்துள்ளார்.
கடந்த ஆண்டு திருமணமாகி கணவருடன் ஐதராபாத்தில் வசித்து வந்த நிலையிலேயே இவரது மரணம் ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சோபிதா சிவான்னாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கர்நாடகாவில் இருந்து உடனடியாக ஐதராபாத் விரைந்துள்ளனர்.
அத்துடன் மகளின் மரணத்திற்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜாக்பாட், அபார்ட்மெண்ட் டூ மர்டர், வந்தனா போன்ற படங்களில் நடித்து விட்டு, பிறகு தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
அடுத்ததாக சோபிதா நடிப்பில் முதல் நாள் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகவுள்ளதால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அத்துடன் சோபிதாவின் இந்த விபரீத முடிவிற்கு என்ன காரணம் என தெரியாமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.