அரசியலில் இருந்து புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தினத்தை மீண்டும் விவாதிக்கிறார் - வர்த்தக அமைச்சர் பதிலடி!

tubetamil
0

 தெற்கில் அரசியலில் புறக்கணிக்கப்பட்ட முன்னாள் அரசியல் வாதிகள்  மாவீரர் தின விவகாரத்தைக் கையில் எடுத்து இனவாத முரண்பாடுகளை மீண்டும் தோற்றுவிக்க முயற்சிப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.



குறித்த விடயம் தொடர்பில் தெற்கில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 


குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

"நாட்டில் மீண்டும் பிரிவினைவாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்க வேண்டிய தேவை வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்குக் கிடையாது.


தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆதரவளித்துள்ளார்கள்.


இந்த அரசில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பிரதான பங்காளிகளாக உள்ளனர். அனைத்து இன மக்களின் ஒத்துழைப்புடன் சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுப்போம்.


மேலும், வடக்கு, கிழக்கில் மாவீரர் தினத்தைத் தமிழ் மக்கள் அனுஷ்டிப்பதால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.


தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இனவாதத்தை முன்னிலைப்படுத்தி தெற்கில் அரசியல் செய்யும் தரப்பினர் வீணாக அச்சமடையத் தேவையில்லை." என  அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top