நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நீக்குவதே எமது தேர்தல் விஞ்ஞாபனம் - விஜித ஹேரத் தெரிவிப்பு!

tubetamil
0

 இலங்கையின் புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுப்போம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


 குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குகின்ற ஒரு முறைக்கு செல்வதையே நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளோம். எனவே நாம் அதனை செய்வோம்.


இதேவேளை, தற்போது மக்கள் எதனை கோரகின்றனர் என்பது தெளிவானது. பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வர வேண்டும். மக்களின் உரைிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.


அரசாங்கமாக நாங்கள் இன மற்றும் மதவாதத்திற்கு எதிராக செயற்படுகின்றோம். அந்த நம்பிக்கை மக்களுக்கு இருக்கின்றது என தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top