பண்டிகை காலத்தில் தாமரைக் கோபுரத்தை பார்வையிட நேரம் நீட்டிப்பு!

tubetamil
0

 பண்டிகை காலத்தில் தாமரைக்   கோபுரத்தை பார்வையிடுவதற்காக நேரத்தை நீடிக்க தாமரைக் கோபுர முகாமைத்துவ சபை தீர்மானித்துள்ளது.



அதனடிப்படையில் பிரகாரம் எதிர்வரும் 25 மற்றும் 26ம் திகதிகளில் தாமரைக் ​கோபுரம் காலை ஒன்பது மணி தொடக்கம் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திறந்திருக்கும்



அத்துடன் எதிர்வரும் 27ம் திகதி காலை ஒன்பது மணி தொடக்கம் இரவு பதினொரு மணி வரை தாமரைக் கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்.



மேலும் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி காலை ஒன்பது மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் தாமரைக் கோபுரம் அன்றைய தினம் விடியும் வரை திறந்திருக்கும்.


2025ம் ஆண்டின் புத்தாண்டு தினமான ஜனவரி 01ம் திகதி நள்ளிரவு தொடக்கம் அடுத்த நாள் ஜனவரி 02ம் திகதி மத்தியானம் 1 மணிவரை சுமார் 52 மணிநேரங்கள் வரை புத்தாண்டை முன்னிட்டு தாமரைக் கோபுரம் தொடர்ச்சியாக பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top