பண்டிகை காலங்களில் கேக் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அர்ஹ சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவிக்கையில் , கேக் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை மற்றும் வரி அதிகமாக இருப்பதால் கேக் தயாரிப்பில் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கோதுமை மா, முட்டை உள்ளிட்ட கேக் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டால், கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு புதிய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சரிடம் தமது சங்கம் சந்தர்ப்பம் கோரியதாகவும் ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் கேக் உள்ளிட்ட உணவுகளின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும், தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் கேக் ஆயிரம் ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.