முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடு சென்றுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவருகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சில தகவல்களின்படி, மனுஷ நாணயக்கார சுவிட்சர்லாந்து சென்ற பின்னர் வேறொரு ஐரோப்பிய நாட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது நெருங்கிய நண்பர்கள் அவர் வருட இறுதி கொண்டாட்டங்களுக்காக குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருப்பதாகவும், நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த முரண்பட்ட தகவல்கள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. மனுஷ நாணயக்கார அல்லது அவரது குடும்பத்தினர் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் மனுஷவின் சகோதரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.