மாகாண சபை தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன? - சபையில் சாணக்கியன் எம்பி. கேள்வி

tubetamil
0

 மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில்,  இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்  கேள்வி எழுப்பியுள்ளார்.



இன்று பாராளுமன்றில்  ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடனம் மீதான விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. 


இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 



மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில்,  இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்  நாடாளுமன்றத்தில் இன்று  கேள்வி எழுப்பினார்.


ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க போவதாகப் பத்திரிகைகளுக்கு குறிப்பிட்டிருந்த விடயத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருத வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 


இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என  சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். 


இதன்போது குறுக்கிட்ட சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னநாயக்க, 


இராசமாணிக்கம் சாணக்கியன் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பதாகவும் ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை எழுப்ப வேண்டாம் எனவும் கோரிகை விடுத்துள்ளார் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top