எதிர்க்கட்சி தலைவரின் தலைமை அலுவலகத்தில் தன்னை தாக்கியுள்ளதாக வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன இரண்டாம் நாள் விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடரில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்பிருந்த அரசாங்கங்களிலே நாங்கள் கண்டோம். இனவாதம் இருந்தது. எங்களை பிரித்து தமிழர்களாக எங்களை ஆட்சி செய்தார்கள். ஆனால் இந்த அரசாங்கம் இதுவரை எதையும் செய்யவில்லை. வடக்கை பிரதி நிதித்துவம் செய்கின்ற படியினால் அதை நான் பெருமையுடன் சொல்ல விரும்புகிறேன். தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே NPP இனால் மூன்றுபேர் வடக்கில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். எங்களுடைய பொய் செய்கின்ற அரசியல் வாதிகளை இல்லாமல் செய்து சுயாதீன குழுக்களில் போட்டியிட்ட எங்களை,மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். ஆகவே இந்த அரசாங்கம் எப்போதும் செய்யாது என்று சொல்லி மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
பாராளுமன்றத்துக்குள் இவர்கள் இன வாத அடிப்படையில் செயற்படுகிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவரின் தலைமை அலுவலகத்தில் என்னை தாக்கினார்கள். நான் ஒரு doctor. சிறுபிள்ளை தனமாக நான் பேசவில்லை நான் இதுபற்றி விளக்கமாக கதைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.