இலங்கையில் தேங்காய் தட்டுப்பாட்டுக்கான காரணம் என்ன? முன்னாள் அமைச்சர் சொல்லும் குரங்கு கதை!

tubetamil
0

அண்மைக்காலமாக இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வருடாந்தம் 200 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் அழித்தமையே தேங்காய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என  முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து வெளியிட்டுள்ளார்.



குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அரசாங்கத்தின் போது, ​​இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டமாக,  இலங்கையின் குரங்குகளை சீன மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது.


ஆனால்  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று தடுத்து நிறுத்தி, மரத்தில் புடவை கட்டுதல், தாள்களை தொங்கவிடுதல், நிலத்தின் ஒரு பகுதியை மீண்டும் புல்வெளிக்கு விடுதல் போன்ற நடைமுறைக்கு மாறான தீர்வுகளை வழங்கியதாக குறிப்பிட்டார்.


இந்த நிலையில் குரங்குகளை சீனாவுக்கு திருப்பி அனுப்ப இன்னும் வாய்ப்பு இருப்பதால், அந்த பிரேரணையை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


இதேவேளை நாட்டில் கடந்த சில தினங்களாக தேங்காய் 200 முதல் 220 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top