ஐரோப்பிய நாடான பெலரூஸில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சுஜீவ ருவன் குமாரவை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொலிஸ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவிக்கையில், குறித்த நபர் பெலாரூஸ் அதிகாரிகளால் விடுதலை செய்யப்படவில்லை என்றும் அவர் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கந்தளாயில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லொக்குபெட்டியை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு நாடு கடத்தல் சட்டத்தை பயன்படுத்தி இலங்கைக்கு அழைத்து வர குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.