சபாநாயகர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அசோக ரன்வல வழங்கிய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்ததோடு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் தீர்மானிதந்தை அடுத்து அசோக ரன்வல தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் நேற்றையதினம் அறிவித்திருந்தார்.