கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நத்தார் தினத்தை முன்னிட்டு விசேட அலங்காரம் மற்றும் கரோல் பாடல் கச்சேரி என்பன நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி இந்த நத்தார் தின கொண்டாட்டமானது ஜனாதிபதி அலுவலகம், முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் ஆரம்பமானது.
அத்துடன் நத்தார் கரோல் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலக வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு இலங்கை இராணுவத்தின் பாடல் குழு மற்றும் இசைக்குழுவினரால் நத்தார் கரோல் கச்சேரி நடத்தப்படுகின்றது.