ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்ன் பதவி விலகல்!

tubetamil
0

 இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர்   செனேஷ் திசாநாயக்க பண்டார இன்றைய தினம் பதவி விலகியுள்ளார். 



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின், கடந்த செப்டம்பர் 25ம் திகதி அப்போதைய ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தினால் , ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவராக செனேஷ் பண்டார நியமிக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில், ராஜபக்‌ஷ குடும்பத்தினர் உகண்டாவில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்த கூற்றை நாடகக் கலைஞர் ஒருவர் கிண்டலடித்த சம்பவம் தொடர்பில் இரண்டொரு நாட்களுக்கு முன்னர் ரூபவாஹினி செய்திகளில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.



இதனையடுத்து, செனேஷ் திசாநாயக்க பண்டாரவுக்கு பதவி விலகுமாறு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பதவி விலகியுள்ள செனேஷ் பண்டார, ஶ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையின் சிரேஷ்ட பேராசிரியராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும் 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top